பாமக மாவட்ட செயலாளரை எட்டி உதைப்பவர்க்கு நான் பரிசு தருகிறேன்.. சூர்யாவுக்காக கெத்து காட்டிய சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2021, 4:13 PM IST
Highlights

இதனால் சூர்யாவின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூர்யாவை  மிரட்டிய பாமக மாவட்ட செயலாளரை கண்டித்துள்ளார்

.

சூர்யாவை மிரட்டிய பாமக மாவட்ட செயலாளரை எட்டி உதைப்பவர்களுக்கு நான் பரிசு தருகிறேன் என்றும், எட்டி உதைப்பது சூர்யா என்ன செந்திலா.? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் ஜெய்பீம் திரைப்படத்தில் அக்கினிச் சட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறு அதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் சீமான் கூறியுள்ளார். ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் அதற்க்காக சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சூர்யாவை எட்டி உதைப்போர்க்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்க தயார் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் 5 கோடி ரூபாய் மாநநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடமாவட்டங்களில் சூர்யாவின் பேனர்களை தாக்குவது, அவரது உருவபொம்மையை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கருணாஸ், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் ப.ரஞ்சித், நடிகர் டி. ராஜேந்தர் ஆகியோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் சூர்யா- பாமக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சூர்யாவின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூர்யாவை மிரட்டிய பாமக மாவட்ட செயலாளரை கண்டித்துள்ளார். இன்று கப்பலோட்டிய தமிழன் வ. உ சிதம்பரனார் அவர்களின் 85ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வா.உ.சி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிசட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறுதான். அந்த காட்சியை அவர் தவிர்த்திருக்கலாம், ஆனால் நான் அந்த காட்சியை பார்க்க தவறி விட்டேன். இல்லை என்றால் நானே சூரியாவிடம் நேரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி பேசி இருப்பேன்.

அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும்  நீக்கியிருக்க வேண்டும், ஜெய்பீம் ஒரு சிறந்த திரைப்படம் அது வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இனி அதைப் பற்றி பேசி பயனில்லை, அதே நேரத்தில் சூர்யாவை எட்டி உதைப்பதற்கு அவர் என்ன செந்திலா.? என்று கேள்வி எழுப்பிய அவர், இப்போது நான் சொல்கிறேன் சூர்யாவை எட்டி உதைப்பவர்க்கு  பரிசுத் தொகை அறிவித்தவரை எட்டி உதைத்தால் நான் பரிசு தருகிறேன் என்றார். திராவிடர் என்றால், சமூகநீதி என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள் ஆனால் எங்களுக்குத்தான் தெரியும் அது சமூக ரீதியாக சமூக ரீதியாக என்று இதுவரை திமுக எந்த பொது தொகுதியிலும் ஆதி தமிழ் குடிமக்களை நிறுத்தவில்லை. ஆனால் நாங்கள் நிறுத்தி உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எப்போதும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!