தமிழகத்தில் சாதி மோதலை தூண்டுகிறார் அன்புமணி ராமதாஸ்.. டிஜிபி அலுவலகத்தில் விசிக புகார்.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2021, 3:29 PM IST
Highlights

அக்கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் இந்த புகாரை அளித்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்துவதாக கூறி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  

ஜெய்பீம் பட சர்ச்சைக்கு தூண்டுகோலாக செயல்பட்ட அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் தலைமையில் இந்த புகார் கொடுக்கப்பட்டது. 10.5 சதவீத ஒதுக்கீடு  விஷயத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைப்பதற்காக அன்புமணி சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்  ஜெய் பீம். இது மொழி, இனம் கடந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள படமாகமாறியுள்ளது. பழங்குடியினர் இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாகி அவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். இத்திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் சமூகத்தை இந்த படம் காயப்படுத்தி விட்டதாக கூறி பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டும் என்று அறிவித்துள்ளதுடன்,  அவர் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக கலமிறங்கியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் டி.ராஜேந்தர், இயக்குனர் வெற்றிமாறன் , இயக்குனர் ப.ரஞ்ஜித் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். வன்னிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பாமக தலைமையின் நடவடிக்கைகள் உள்ளது என்றும், கட்சி தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையிலவஜெய்பீம் பட சர்ச்சைக்கு தூண்டுகோளாக  அன்புமணி ராமதாஸ் செயல்பட்டதாக்கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக காவல்துறை டிஜிபியிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் இந்த புகாரை அளித்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்துவதாக கூறி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் படத்தில் உங்களின் வன்மத்தை காட்டினால் ரசிகர்கள் திரையரங்குகளில் காட்டுவார்கள் எனக்கூறியிருந்தார். 

அதன் பின்பே பாமகவை சேர்ந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் மற்றும் மயிலாடுதுறை பழனிச்சாமி ஆகியோர் நடிகர் சூர்யாவை மிரட்டும் தொனியில் வீடியோ வெளியிட்டனர். குறிப்பாக வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக அன்புமணி சாதி மோதலை தூண்டிவிடும் செயலை செய்து வருவதாக அவர் கூறினார். ருத்ர தாண்டவம் படத்தில் வன்னியர்களை இழிவாக காட்சிப்படுத்தியதை தடுக்காமல் ஜெய்பீம் படத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்க செயல் என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!