தென் மாவட்டம் முழுவதும் சூர்யா பின்னால் நிற்கிறது.. தொட்டுபார்.. ராமதாசுக்கு பசும்பொன் பாண்டியன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2021, 1:56 PM IST
Highlights

சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட  ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும்,

சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட  ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் எச்சரித்துள்ளார். ரவுடி கும்பலை வைத்து மிரட்டும் அரசியலை ராமதாஸ் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்  ஜெய் பீம். இது மொழி, இனம் கடந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள படமாகமாறியுள்ளது. பழங்குடியினர் இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாகி அவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். இத்திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் சமூகத்தை இந்த படம் காயப்படுத்தி விட்டதாக கூறி பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டும் என்று அறிவித்துள்ளதுடன்,  அவர் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. 

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக கலமிறங்கியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை மிக கடுமையாக எச்சரித்து பேட்டி கொடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, தனது தவறான அரசியல் முடிவுகளால் பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. ராமதாஸ் எந்த மக்களுக்காக கட்சி ஆரம்பித்தாரோ அந்த மக்களையே அவர் ஏமாற்றி வருகிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி  அவர் வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளார். அந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அந்த மக்களுக்கு கிடைக்காது என்று அவருக்கு நன்கு தெரியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பை செய்யவைத்தார். அதேபாணியில் தொடர்ந்து அனைத்தையும் மிரட்டி சாதித்துவிடலாம் என அவர் தப்புக்கணக்கு போடுகிறார்.

ஆனால் இப்போது நடப்பது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ரவுடித்தனம் செய்ய முடியாது.  இப்போது சூர்யாவை எதிர்ப்பது போல ரஜினியின் பாபா படத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மதுரையில் ரஜினி ரசிகர்களிடம் உதை வாங்கினார்களே அப்பொழுது ராமதாசால் என்ன செய்ய முடிந்தது. இப்போதும் நாங்கள் சொல்கிறோம், சூர்யாவை இதே போல மிரட்டினால், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்படும். ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வடமாவட்டங்களில் நீங்கள் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், தென்மாவட்டங்கள் முழுவதும் அதன் ஒட்டுமொத்த இளைஞர்களும் சூர்யாவின் பின்னால் நிற்கிறோம். நீங்கள் சூர்யாவை நெருங்கக் கூட முடியாது அவரிடம் ஐந்து கோடி அல்ல ஐந்து ரூபாய் கூட உங்களுக்கு கிடைக்காது இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!