தமிழகத்தில் பைக் ஓட்டதான் வந்தேன். போலீசை அதிரவைத்த ஏடிஎம் கொள்ளையன்.. விசாரணையில் வாக்குமூலம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2021, 11:44 AM IST
Highlights

தன்னுடன் தமிழகம் வந்து இருசக்கர வாகனம் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்து தன்னை தமிழகம் அழைத்து வந்ததாக விசாரணையில் வீரேந்திர ராவத்  தரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களில் இரண்டாவது குற்றவாளியான வீரேந்தர் ராவத்தை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து இரண்டாவது நாளாக தரமணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி ஒரு கும்பல் சுமார் 45 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது. அக்கும்பலை கைது செய்ய சென்னை தெற்கு காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஹர்ஷ், விரேந்தர் ராவத் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விரேந்தர் ராவத்தை 7 நாள் விசாரணைக்கு அனுமதிக்க  தரமணி போலீசார் வலியுறுத்திய நிலையில்  அவர்களுக்கு நான்கு நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விசாரணையில் விரேந்தர் ராவத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார், அதாவது, அரியானா மாநிலம் மேவட் மாவட்டம் பல்லப் கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் தன்னுடன் தமிழகம் வந்து இருசக்கர வாகனம் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்து தன்னை தமிழகம் அழைத்து வந்ததாக விசாரணையில் வீரேந்திர ராவத்  தரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும் தான் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும்,தனக்கு ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் எதுவும் தெரியாது என்றும். இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்காகவே தன்னை அழைத்து வந்ததாகவும், 

தான் பிளம்பராக வேலை பார்த்து பிழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பார்த்தவுடன் தனக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என்று அமீர் அர்ஷிடம் கேட்டதாகவும், அரியான வந்தபிறகு தருவதாக அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து தரமணி போலீசார் வீரேந்திர் ராவத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

click me!