அடேங்கப்பா வெளியே வந்த டி.டி.வி.தினகரன்... அமமுகவில் இப்படியொரு அதிரடி முடிவா..?

Published : Jul 01, 2021, 11:19 AM IST
அடேங்கப்பா வெளியே வந்த டி.டி.வி.தினகரன்... அமமுகவில் இப்படியொரு அதிரடி முடிவா..?

சுருக்கம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு வெளியில் தலைகாட்டாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சசிகலாவில் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளும் டி.டி.வி.தினகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராகவும், மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளராகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளராக ஹாஜி K.முகமது சித்திக், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக P.V.சங்கர்  ராஜா, மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளராக P.பாரிவள்ளல், இதுவரை மத்திய சென்னை மத்திய மாவட்டம் கழகம், துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பிலிருக்கும் ஹாஜி K.முகமது சித்திக் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.V.சங்கர் ராஜா , மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் P.பாரிவள்ளல் அவரவர் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!