Tamilnadu Corona: உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. கொரோனோ அதிகமா பரவப்போகுது.. ஸ்டாலின் அபாய எச்சரிக்கை .

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 12:29 PM IST
Highlights

ஒமிக்ரான் என்ற புதிய தொற்று, புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்ட துவங்கி உள்ளது பிரபல  ஆங்கில பத்திரிக்கையில், வந்த செய்தியில் , ஒமிக்ரான் தாக்கம் அதிகரிபதின் காரணத்தால்  தற்போது கொரோனாவில் இருந்து  மீண்டு கொண்டிருந்த பயணம் தடை படும் என்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களில் 46% பேர் சென்னையில் உள்ளனர் என மற்றொரு ஆங்கில பத்திரிக்கையில் குறிபிடப்படுள்ளது. 

தமிழகத்தில் கொரோனோ தொற்று நிச்சயம் அதிகரிக்கும் எனவே அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுகு தடுப்பூசி போடும் பணி இன்று துவங்குகிறது. தமிழகத்தில் சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி மா.சுப்பிரமணியன்,அன்பில் மகேஷ் பொய்யா மொழி , செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர்  கலந்து கொண்டனர். தொடர்ந்து  பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,வரும் 10ஆம் தேதி பூஸ்டர் டோஸ் போடும் பணியை துவக்கிவைக்க வுள்ளார்கள். இதனை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருடான அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடனான கூட்டத்தில் முதல்வர் தடுப்பூசி பணிகள் மேற்கொள்வதையும் துவக்கிவைப்பதையும் தெரிவித்தோம் அனைவரும் பாராட்டினார்கள்.

உலகெங்கிலும் தடுப்பூசி எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். ஜனவரி மாதம் தடுப்பூசி துவங்கியது முதல் மே மாதம் வரை 63லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. திமுக அரசு அமைந்ததும் தடுப்பூசி போடும் பணியினை மக்கள் இயக்கமாக கொண்டு சென்றோம் இதன் மூலம் கர்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்று திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களுக்கு ஆகியோருக்கு  தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றார்.இதுவரை 86.95% முதல் தவணையும், 60.71 % இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுள்ளது, தமிழகம் முழுவதும் 33.46 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது, இன்று முதல்வர் இப்பணியை துவக்கியவுடன் அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தடுப்பூசி போடும் பணி துவங்கப்படும் என்றார். ஜனவரி இறுதிக்குள் 15-18வயதினருக்கு முடித்துவிடுவோம் என கூறினோம் ஆனால் இன்று 1000க்கும் மேற்ப்பட்டோருக்கு துவக்கிவைக்கிறார், இதனால்  15நாட்களில் 100% தடுப்பூசியினை 15-18வயதினருக்கு செலுத்திவிடுவோம் என நம்புகிறோம் எனக் கூறினார்.

இதனையாடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா இரண்டாவது அலையை எப்படி பட்ட தீவிர நடவடிக்கை எடுத்து தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்களுடைய வாழ்வாதாரம் ஓரளவு மீண்டு  வந்தது என்று உங்களுக்கு தெரியும் ஒமிக்ரான் என்ற புதிய தொற்று, புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்ட துவங்கி உள்ளது பிரபல  ஆங்கில பத்திரிக்கையில், வந்த செய்தியில் , ஒமிக்ரான் தாக்கம் அதிகரிபதின் காரணத்தால்  தற்போது கொரோனாவில் இருந்து  மீண்டு கொண்டிருந்த பயணம் தடை படும் என்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களில் 46% பேர் சென்னையில் உள்ளனர் என மற்றொரு ஆங்கில பத்திரிக்கையில் குறிபிடப்படுள்ளது. நீங்கள்  அச்சப்பட இதை கூறவில்லை,  நீங்கள் பாதுகாப்போடு இருக்கனும், அது தான் என் மனதிற்கு மகிழ்ச்சி என்றார். ஒமிக்ரான் நோய் தாக்கம் குறைவாக இருந்தாலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மையுடையது. நோய் தாக்கம் தமிழகத்தில் நிச்சயம் அதிகரிக்கும் அதை தடுக்கும் முக்கிய கேடயம் முககவசம் மற்றும்  சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், கொரோனா  தடுப்பூசி போட்டால் நோய்தாக்கம் குறைவாக உள்ளது. 

அமெரிக்காவில் நோய் பரவல் அதிகரித்துள்ளது,  நோய் தொற்று கொஞ்ச கொஞ்சமாக நமது நாட்டில் அதிகரித்து வருகிறது மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுபினர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். எனவே  மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்,  60 வயதை கடந்தவர்கள் இரு தவணை தடுப்பூசியும்  போட வேண்டு என்று அன்போடு, பணிவோடு, உங்களில் ஒருவனாக கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். குடும்பத்தில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம் என்றார். எல்லாவற்றிலும் முதலிடம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறினார், வரும் காலத்தில் நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுத்தாக வேண்டும் , ஒரு கை தடினால் ஓசை வராது அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அப்போது முதலமைச்சர் தெரிவித்தார்.
 

click me!