" எந்த தியாகமும் செய்யாத சாமியார் கூட்டம் நாட்டை ஆள்கிறது ".. பாஜகவை அசிங்கப்படுத்திய கே.எஸ் அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 12:13 PM IST
Highlights

நாம் நம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதுதான் கொள்கை சார்ந்த அரசியல் ஜவஹர்லால் நேரு முதல் பிரதமராக ஆட்சிக்கு வந்து நமது நாட்டின் அடிப்படை பிரச்சனை களை தீர்த்து வைத்தார் விவசாயத்திற்காக ஏராளமான அனைகளை கட்டினார் செல்வந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்று ஏழை விவசாயிகளுக்கு சொந்தமாக வழங்கினார். 

காங்கிரஸ் கட்சி இன்றி தமிழகத்தில் யாரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையை நம் தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். மேலும் பாஜகவை எதிர்த்து போராட முடியாமல் போனதே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று அவர் விமர்சித்துள்ளார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி தோறும் காங்கிரஸ் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார  வாகனம் துவக்க விழாவின் போது கே.எஸ் அழகிரி இவ்வாறு பேசினார். 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி..  சுதந்திர இந்தியாவில் பல ஆண்டுகள் எதிரிகளே இல்லாமல் ஆட்சி செய்த கட்சி..  இன்றும் காங்கிரஸ் கட்சியினர் இப்படித்தான் தங்கள் கட்சியை கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். " எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்"  என்று சொல்வது போல அப்படி ஒரு உச்சத்திலிருந்த காட்சி, இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியுள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவில் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியான் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மெல்ல மெல்ல தேய்ந்து  2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் கட்சியாக மாறியுள்ளது. 1980ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 380 எம்எல்ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியால் 2017ஆம் ஆண்டு வெறும் 7 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. 

ஒடிசாவிலும், குஜராத்திலும் 24 ஆண்டுகள் பின்னரும் இழந்த ஆட்சியை காங்கிரஸால் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் 49.2 சதவீதமான இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மூன்று முறை ஆட்சி வகித்த காங்கிரசுக்கு இப்போது வெறும் 5% வாக்குகளே உள்ளன என்பது தனி சோகம். குறிப்பாக பட்டியலின மக்கள் ஆதரவு சிறுபான்மையின மக்கள் ஆதரவு என்ற விஷயங்களை காங்கிரஸ் கையில் எடுத்து அரசியல் செய்து வந்த நிலையில், தற்போது மாநில கட்சிகளும் இத்தகைய விஷயத்தை பின்பற்றுவதால் காங்கிரசுக்கு அது பெரும் சவாலாக மாறியுள்ளது. இயல்பாகவே தேசிய கட்சியின் மீது ஈர்ப்பு குறைந்து பிராந்திய கட்சிகளை நம்பும் நிலைக்கு மக்கள்  வந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்புறத்தில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் வலிமை பெற்றுள்ளது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் கூட அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டவும், அல்லது பாஜகவை வலிமையாக எதிர்க்கவும் காங்கிரசிடம் எந்த திட்டம் இல்லை என்ற விமர்சனமும் அக்கட்சி மீது இருந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது  திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து அதிக இடங்களை வாங்கிய காங்கிரஸ் இப்போது கொடுக்கும் இடங்களை கொடுங்கள், வாங்கிக் கொள்கிறோம் என  திமுகவிடம் பொட்டிப் பாம்பாய் அடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தேசிய அளவில் காங்கிரசை ஓரம்கட்டிவிட்டு பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் 3-வது அணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள்  பரபரக்கின்றன. இந்நிலையில்தான் தமிழக காங்கிரஸ் கமிட்ட தலைவர் கே.எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியில் அருமை பெருமைகளை காங் தொண்ரகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தவறிவிட்டனர் என்று ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் சென்னையில் நடந்த வீதி தோறும் காங்கிரஸ் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார  வாகனம் துவக்க விழாவின் போது பேசியதாவது, இதனை தொடர்ந்து விழா மேடையி பேசிய மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, எந்த தியாகமும் செய்யாத ஒரு சாமியார் கூட்டம் ஒரு மணி நேரம் கூட சிறை செல்லாத சாமியார் கூட்டம் இன்றைக்கு எப்படி ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். நாம் நம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதுதான் கொள்கை சார்ந்த அரசியல் 

ஜவஹர்லால் நேரு முதல் பிரதமராக ஆட்சிக்கு வந்து நமது நாட்டின் அடிப்படை பிரச்சனை களை தீர்த்து வைத்தார் விவசாயத்திற்காக ஏராளமான அனைகளை கட்டினார் செல்வந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்று ஏழை விவசாயிகளுக்கு சொந்தமாக வழங்கினார். இதுதான் விவசாய புரட்சி மனித குலத்தால் சாதிக்க முடியாத சாதனைகளையெல்லம் பண்டித நேரு செய்தார். நாட்டின் மிகப்பெரிய பஞ்சத்தை போக்கியவர் நேரு. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தவர்.

ஜவஹர்லால் நேரு அமெரிக்காவிடம் இருந்து அரிசியும் கோதுமையையும் இலவசமா வாங்கிய நிலையை மாற்றிவர் அன்னை இந்திராகாந்தி நாடு விவசாய புரட்சி அடைந்து இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் அன்னை இந்திராவும் அவரோடு துணை நின்ற இரு தமிழர்களும் தான் காரணம் காங்கிரஸ் கட்சியினர் நமது சாதனை களை சொல்லி பரப்புரை செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் இல்லை என்று சொன்னால் தமிழகத்தில் யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!