தமிழ்நாட்டை குறி வைத்து காய் நகர்த்தும் மோடி.. மதுரையில் மோடி பொங்கல்.. வேலு நாச்சியார் பற்றி தமிழில் ட்வீட்..

By Raghupati RFirst Published Jan 3, 2022, 11:44 AM IST
Highlights

மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியவர் என வேலுநாச்சியாரின் பிறந்தநாளை ஒட்டி அவரைப் புகழ்ந்து புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க கடந்தாண்டு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

தற்போது, இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்க தமிழகம்  வருகிறார். மதுரையில் வரும் ஜனவரி 12 ம் தேதி, தமிழக பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 

முன்னதாக ஏற்கெனவே ஜனவரி 12-ம் தேதி, விருதுநகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும், அப்போது அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விழாவில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

 

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.

— Narendra Modi (@narendramodi)

தொடர்ந்து தமிழ்நாட்டை குறி வைத்து பிரதமர் மோடி போடும் ஸ்கெட்ச், அடுத்த தேர்தலில் தமிழகத்தில் பலிக்கும் என்றே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில்  மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியவர் என வேலுநாச்சியாரின் பிறந்தநாளை ஒட்டி அவரைப் புகழ்ந்து புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். 

அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழகத்தையும் புகழ்ந்து பேசி வருகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் அடுத்த சட்டமன்ற தேர்தலில், பாஜக எதிர்க்கட்சியாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் தான் , பிரதமர் தொடர்ந்து தமிழகத்துக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

click me!