"ஏய்.. அண்ணாமலை லூசு பிடிச்சு திரியுறாரு போல" குற்றத்தை நிரூபி பதவி விலகுறேன்.. கொதித்த மதுரை மூர்த்தி.

By Ezhilarasan Babu  |  First Published Jun 24, 2022, 12:41 PM IST

தன்மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் தான்  பதவியை விட்டு விலக தயார் என்றும், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலை லூசுத்தனமாக பேசக்கூடாது என்றும் திமுக அமைச்சர் மதுரை மூர்த்தி ஆவேசம் தெரிவித்துள்ளார்.


தன்மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் தான்  பதவியை விட்டு விலக தயார் என்றும், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலை லூசுத்தனமாக பேசக்கூடாது என்றும் திமுக அமைச்சர் மதுரை மூர்த்தி ஆவேசம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதை வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக-பாஜக, திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதிலும் பாஜக மாநிலத் தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை  ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இது ஒருபுறம் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மதுரை மூர்த்தியை குறிப்பிட்டு சில குற்றச்சாட்டுகளை கூறினார். அதில், " பத்திர பதிவு துறை அமைச்சர் மதுரை மூர்த்தி அவர்கள் புதிதாக ஒரு சயின்டிபிக் ஊழல் ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் உள்ள ஜாயின்ட் 4 என்கின்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து ஒருத்தரை தூக்கி திண்டுக்கல் ஆபீசுக்கு இடமாறுதல் செய்கிறார்,

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் முன்னாள் ஒருங்கிணைப்பாளரா..? 5ல் ஒரு பங்கு ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்-சிவி.சண்முகம் அதிரடி

பின்னர் அந்த அலுவலர், அமைச்சரிடம் ஐயா என்னை ஏன் டிரான்ஸ்ஃபர் செய்தீர்கள், எனது குடும்பம் மதுரையில் இருக்கிறது என கூற, மீண்டும் அன்று மாலையே அந்த அதிகாரி மதுரை அலுவலகத்திற்கு திரும்ப அழைக்கப்படுகிறார். இதில் நூதன ஊழல் என்னவென்றால், காலையில் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்வது பின்னர் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மாலையில் அவர்களை மதுரைக்கு கொண்டு வந்து இன்னொரு பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் போடுவது, இதுதான் நவீன திருட்டு, இதுதான் அமைச்சர் மூர்த்தியின் சாதனை.

இதேபோல சமீபத்தில் தூத்துக்குடியில்  விவசாயத்திற்கு சொந்தமான 2500 ஏக்கரை அங்கே இருக்கக் கூடிய பத்திரப்பதிவு துறை அதிகாரி மாற்றி பதிவு செய்து விட்டார். பின்னர் அதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தி போலியாக பத்திரப் பதிவு செய்த அந்த பதிவை கேன்சல் செய்தோம், இதுகுறித்து மூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை நமது ஆட்சியில் நடைபெற்ற அல்லது கடந்த ஆட்சியில் நடைபெற்றிருக்கும் எனக் கூறுகிறார், இந்த ஆட்சியில் தான் நடந்தது என மீண்டும் பத்திரிக்கையாளர்கள் கூற, அப்படியா பார்க்கிறேன் என சொல்கிறார், இது கூட தெரியாமல் அவர் அமைச்சராக இருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

 "அண்ணாமலை ஏதோ லூசு பிடித்து போய் திரிகிறார் என்று நினைக்கிறேன். எந்த அலுவலகத்திலும் உடனே டிரான்ஸ்பர் செய்து உடனே திரும்பப் பெற முடியாது, அந்த அதிகாரி 25 நாட்கள் டெப்யூடேஷனில் திண்டுக்கல்லுக்கு போடப்பட்டார், ஆட் பற்றாக்குறை இருந்ததால் காலியாக இருந்த இடத்திற்கு அவர் அனுப்பப்பட்டார், இந்நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக 25 நாள் அவகாசம் கேட்டுள்ளார். அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இதேபோல தூத்துக்குடியில் 2500 ஏக்கர் விவசாய நிலம் பத்திர பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார். அப்படி தவறாக பதிவு செய்ததாக தகவல் வந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த துறையினுடைய சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த நிலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?

ஆனால் அண்ணாமலை பாஜகவினர் வந்தார்களால், அங்கு போராட்டம்  நடந்ததாம், உடனே அரசு திரும்ப கொடுத்ததாம், ஏய்.. நான் சொல்கிறேன் உனது கட்சி கூட்டணியில் இருக்கிற அதிமுக ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்கள் போலியாக பதிவு செய்திருக்கிறார்கள். அது குறித்து ஒரு குழுவை வைத்து ஆராய்ந்து வருகிறோம், நடவடிக்கை எடுக்கிறோம்... எங்களுக்கு எந்த புகார் வந்தாலும் உடனே பதிவை ரத்து செய்து விடுகிறோம். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் அதிக அளவில் வருவாய் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதை 50 ஆயிரம் கோடியாக உயர்த்த முயற்சித்து வருகிறோம். அதனால் அண்ணாமலை வாய்க்கு வந்ததை ஏதாவது பேசக்கூடாது என ஏர்போர்ட் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!