ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு காலி..! இனி அவருக்கு இந்த பதவி தான்...!சிவி.சண்முகம் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jun 24, 2022, 12:35 PM IST

5 ல் ஒரு பங்கு ஆதரவு இருந்தாலே பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதில் அளித்துள்ளார்.


தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு பிரிவாக தற்போது அதிமுக பிரிந்துள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த சிவி.சண்முகம்

இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியோடு இன்று காலை ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ல் ஒரு பங்கு பேர் கையெழுத்து போட்டு கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட வேண்டும் என தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பொதுக்குழு முறையற்றது எனக்கூறிய வைத்திலிங்கம் கூறிய கருத்து ஏற்புடையது இல்லை. பொதுக்குழுவை கூட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. ஓபிஎஸ் கையெழுத்திட்டு கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா வைத்திலிங்கம்? என கேள்வி எழுப்பினார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லையென்று தெரிவித்தவர், அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; அதுதான் அதிமுகவின் சட்ட விதி எனவும் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியவர் இவர்தானா? சிக்கிய பரபரப்பு காட்சிகள்.!

தொடர்ந்து பேசிய சிவி.சண்முகம், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் என்றும் இன்னாள் அதிமுக பொருளாளர் என குறிப்பிட்டார்.ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்.ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் என்றே தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஜூலை 11ம் தேதி நடைபெறும்அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது..! இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்

click me!