நான் விசிக அல்ல.. நான் திமுகவை சேர்ந்தவன்... அலறவிட்ட ரவிக்குமார் எம்.பி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2021, 10:17 AM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் தலைவர் எம்.எல் ரவி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் ஒரு கட்சியைச் சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி தனது வழக்கில் வலியுறுத்தினர்

.

நான் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்தவர் அல்ல நான் திமுககாரன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தாவல் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே வழக்கில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி எம்.பியும், தான்  தேர்தலுக்கு முன்பாகவே மதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில்  சேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது  ரவிக்குமாரும் இதே தகவலை கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சார்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் தலைவர் எம்.எல் ரவி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் ஒரு கட்சியைச் சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி தனது வழக்கில் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது தான் திமுக உறுப்பினர் என்றும், தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொதுநல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே வழக்கில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியும், தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டதாக ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!