இந்த மாதிரி தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பல... எச் ராஜாவை கிழித்தெடுத்த ஸ்டாலின்

Published : Dec 04, 2018, 09:37 AM ISTUpdated : Dec 04, 2018, 09:42 AM IST
இந்த மாதிரி தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பல... எச் ராஜாவை கிழித்தெடுத்த ஸ்டாலின்

சுருக்கம்

எச் ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா நிவாரண பணிகளை முதல்வர் எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு டீக் கடைகளில் டீக்குடிப்பது ஊரை ஏமாற்றும் செயலாகும். இந்த அரசு இன்னும் முழுமையான நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை.

இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும். சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இதில் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, பினராயி வஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா? என்று கூறிய எச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை என தடடாலடியாக கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!