உழைக்கிற உழைப்புதான் மனித வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வருவதற்கான உந்து சக்தியாக இருக்கும். புறவாழ்க்கை குறித்து ஆண்கள் முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு சுறியுள்ளார்.
சுயமரியாதை, பகுத்தறிவு திருமணத்திற்கு காலம், நேரம் கிடையாது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திருமண விழாவில் பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
undefined
இதையும் படிங்க;- திமுக ஆட்சியில் ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு ரவுடிகளுக்கு துணிச்சல் வந்துடுச்சு!ஓபிஎஸ்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வேலு;- நான் சுயமரியாதைக்காரன். நான் பகுத்தறிவு திருமணத்தை செய்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் தான் எனது திருமணம் நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா என்ன? சிங்கக் குட்டி போல் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். உழைக்கிற உழைப்புதான் மனித வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வருவதற்கான உந்து சக்தியாக இருக்கும். புறவாழ்க்கை குறித்து ஆண்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க;- ஆளுநரை விமர்சிக்க தயங்கும் இபிஎஸ்? சித்தாந்தமே தெரியாது சொல்பவர் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவரா? KC. பழனிசாமி
குடும்பத்தில் பெண்கள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். மனைவி பேச்சை கேட்டால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு தான் சமையல் அறையில் என்ன இருக்கிறது என்பது தெரியும். அங்கே சென்று ஆண்கள் அவர்களை ஆதிக்கம் செய்யக்கூடாது. அதனால் தான் நான் பொண்டாட்டி பேச்சை கேட்க வேண்டும் என்ற படத்தை தயாரித்ததாகவும் கூறினார்.