மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், 29 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் அமைக்கப்போவதாக கூறப்படும் விவகாரத்தில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கோவில்களின் நிதியை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் செலவிட வேண்டும் என்பது விதி என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கோவில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்? அதை பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு அறங்காவலர் குழு ஒப்புதலோடு, அந்த நிதியை கலாச்சார மையத்திற்கு பயன்படுத்த இருக்கின்றனர்" என்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், 29 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் அமைக்கப்போவதாக கூறப்படும் விவகாரத்தில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோவில்களின் நிதியை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் செலவிட வேண்டும் என்பது விதி. கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் பக்தர்கள் நிதி அளிக்கின்றனர் என்பது தான் உண்மை.
undefined
விதியை மீறி செயல்பட யாருக்கும் உரிமையில்லை. சட்ட விரோதமாக செயல்பட அரசுக்கு உரிமையில்லை. தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் அரசே ஈடுபடுவது பொறுப்பற்ற செயல். அறங்காவலர் குழு அமைப்பதிலேயே முறைகேடுகள் இருக்கின்றன என்பதே தலையாய குற்றச்சாட்டு. அறங்காவலர்கள் கோவில் நிர்வாகத்தை முறையாக செலுத்தவும், கோவில் நிதியை கோவில் மேம்பாட்டிற்காக மட்டுமே செலவிடவும் தான் அதிகாரம் உள்ளது. மற்றபடி கோவில் நிதியின் சொந்தக்காரர் அந்த கோவிலில் உள்ள கடவுளே என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது என்பதை சேகர் பாபு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கலாச்சார மையம் அமைக்க வேண்டுமென விரும்பினால் தமிழக அரசின் நிதியிலிருந்து அமைக்கட்டும். ஹிந்து அறநிலையத்துறை கோவிலை நிர்வாகங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதை கண்காணிக்க கூடிய ஒரு சாதாரண அமைப்பு மட்டுமே என்பதை சேகர்பாபு அவர்கள் உணரவேண்டும். தொடர்ந்து கோவில் நிதியை முறைகேடாக, தவறாக, சட்டத்திற்கு புறம்பாக, தேவையில்லாது செலவு செய்வதை தவிர்ப்பது அரசுக்கு நல்லது, இல்லையெனில் நீதிமன்றத்தில் அவமதிப்பிற்கும், கண்டனத்திற்கும் ஆளாகி வருந்த வேண்டி வரும் என எச்சரிக்கிறேன். சட்டத்தை பின்பற்ற வேண்டிய, அமல்படுத்த வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்பட முயற்சிப்பது ஜனநாயக விரோதம். உடன் இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.