இறுதியில் நீதியே வெல்லும் என்று நம்புகிறேன்... ராகுலுடன் பேசியதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் டிவீட்!!

By Narendran SFirst Published Mar 23, 2023, 7:30 PM IST
Highlights

பாஜக, தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ராகுலுடன் பேசியதற்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பாஜக, தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ராகுலுடன் பேசியதற்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது. இதை அடுத்து ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை நீக்குவதற்கு சபாநாயருக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது?

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது... அண்ணாமலை குற்றச்சாட்டு!!

பின்னர் ராகுல்காந்தியுடன் பேசியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், ராகுல்காந்தி போன்ற ஒரு தலைவர் குற்றம் சாட்டும் நோக்கத்தில் அந்த கருத்தை சொல்லவில்லை என்று அவரே கூறிய பின்னும் தண்டிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. எதிர்கட்சிகளை குறிவைக்கும் பாஜக, தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். ராகுல் காந்தியுடன் பேசி எனது ஆதரவை தெரிவித்தேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

It's highly deplorable & unprecedented that a leader like Thiru is convicted for a comment which he himself said it was not made with blameworthy mind. (1/2)

— M.K.Stalin (@mkstalin)
click me!