"முதலமைச்சராக இல்ல ஒரு அப்பாவாக கேட்கிறேன்".. தயவு செய்து கேளுங்க.. உருக்கமாக பேசிய ஸ்டாலின்..

By Ezhilarasan Babu  |  First Published Jul 27, 2022, 12:27 PM IST

தயவுசெய்து பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள் காலை  சிற்றுண்டி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்வதுடன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


தயவுசெய்து பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள் காலை  சிற்றுண்டி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்வதுடன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதைத்தான் முதலமைச்சர் எனும் அதிகாரத்தில் கேட்கவில்லை ஒரு அப்பாவாக இருந்து கேட்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:பரபரப்பு.. போராட்டத்தில் மயங்கிய எடப்பாடி பழனிசாமி.. மேடையில் நின்றுக்கொண்டிருந்த போது திடீர் மயக்கம்..

இந்நிலையில் மாணவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்காக விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் இன்று அவர் தொடங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது, இதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:- பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விட எனக்கு உற்சாகமான நிகழ்ச்சி ஒன்றும் இல்லை, நான் கொரோனாவில் இருந்து ஓரளவு மீண்டிருந்தாலும் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்: சென்னையின் புதிய விமானநிலையம் எங்கு அமையவுள்ளது..? அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய தகவல்

இன்னும் உடற் சோர்வு இருக்கிறது. எனது தொண்டை பாதித்தாலும் தொண்டு பாதிக்கக் கூடாது என செயல்பட்டு வருகிறேன் என்று பேசிய அவர், காலை உணவு சாப்பிடாமல் இருக்கும் மாணவர்கள் கை தூக்குங்கள் என வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் கேட்டபோது 5 முதல் 3 பேர் வரை காலை உணவு சாப்பிடவில்லை என கூறினார்கள், நான் கூட பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பேருந்து பிடிப்பதற்காக பலமுறை சாப்பிடாமல் சென்றிருக்கிறேன், எனவே தற்போது காலையில் பள்ளி மாணவர்கள் சிற்றுண்டி சாப்பிடாமல் வருவதை தவிர்க்க இனிய காலை 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

அதற்கான அரசாணையில் நேற்று கையெழுத்து போட்டுவிட்டு மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்குவதன் மூலம் சத்துணவு திட்டம் அடுத்த நிலையை எட்டியுள்ளது. மாணவர்கள் ஒருபோதும் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை இருக்க வேண்டும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் உடற் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், இந்த அறிவுரைகளை முதலமைச்சராக நான் கூறவில்லை ஒரு அப்பாவாக அம்மாவாக இருந்து உங்களுக்குச் சொல்கிறேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் இருந்தால் படிப்பு தன்னால் வந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!