சென்னையில் நடந்த அதிமுக ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென்று மயக்கம் அடைந்தார். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. வெயில் காரணமாக மயக்கம் ஏற்பட்டதும் தண்ணீர் அளித்து மேடையிலேயே அமர வைக்கப்பட்டார்

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு உரையாற்றினார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அவரது உரை இருந்தது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் திமுக அரசை கண்டித்து பேசினர்.
இந்நிலையில் ஆர்பாட்டத்தின் மேடையில் நின்றுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி திடீரென்று மயக்கமடைந்தார். வெயில் காரணமாக அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அதிமுகவினர் அவருக்கு தண்ணீர் அளித்து, மேடையிலேயே அமர வைத்தனர். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், தனது காரில் புறப்பட்டார்.