காதல் மனைவியிடம் ஓயாமல் சண்டை போட்ட கணவன்.. யாருமில்லா நேரத்தில் மனைவி எடுத்த பயங்கர முடிவு..

Published : Dec 30, 2020, 12:17 PM IST
காதல் மனைவியிடம் ஓயாமல் சண்டை போட்ட கணவன்.. யாருமில்லா நேரத்தில் மனைவி எடுத்த பயங்கர முடிவு..

சுருக்கம்

இதனால், பிரியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அய்யப்பாதாஸ் (வயது 28), பெயிண்டர். இவருக்கும் குளச்சல் அருகே பத்தறையை சேர்ந்த சந்திரன் மகள் பிரியா (24) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பிரியாவின் தாயார் ருக்குமணி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பிரியாவின் கணவர் அய்யப்பதாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!