ரஜினியின் போஸ்டர்களை கிழித்தெறிந்து ரஜினி ரசிகர் வெறித்தனம். கட்சி அறிவிப்பில் இருந்து பின்வாங்கியதால் விரக்தி

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2020, 12:02 PM IST
Highlights

அரசியல் கட்சி தொடங்கும் முயற்ச்சியை கைவிடுவதாக  ரஜினி அறிவித்த நிலையில், மிகவும் அதிருப்தி அடைந்த அவர்,ரஜினியின் பிளக்ஸ் போனர்களை கிழ்த்தெறிந்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடர்பான முடிவில் இருந்து பின் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் எங்களுக்கு டிசம்பர் 29-கறுப்பு தினம் என சமூக வளைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது கடையில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் படங்களை கிழித்து எறிந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான தனது முடிவில் இருந்து பின் வாங்குவதாக நேற்று வெளியிட்டார்,

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான தக்கலை நீதி மன்றம் எதிரே டீ கடை நடத்தி வரும் நாகராஜன் என்பவர், டிசம்பர் 29-எங்களுக்கு கறுப்பு தினம் என கூறி வீடியோ வெளியிட்டதோடு தனது டீக்கடையில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான பிளக்ஸ் பேனர்களை கிழித்து எறிந்தார். கடந்த 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று அவரது அரசியல் பிரவேசத்தை பிரபல படுத்துவதற்காக வறுமையிலும் தன்னால் இயன்ற அளவிற்கு அனைவருக்கும் தனது டீக்கடையில் இலவச டீ விநியோகம் செய்தார். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் நேசித்து வரும் ரஜினியின் அரசியல் கட்சியை பிரபலப்படுத்த தொடர்ந்து பாடுபட உள்ளதாவும் கூறிவந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அரசியல் கட்சி தொடங்கும் முயற்ச்சியை கைவிடுவதாக  ரஜினி அறிவித்த நிலையில், மிகவும் அதிருப்தி அடைந்த அவர்,ரஜினியின் பிளக்ஸ் போனர்களை கிழ்த்தெறிந்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது போல ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் மீது அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

 

click me!