மறைந்த மனைவிக்கு சிலை வடித்த கணவர்.! கண்கலங்கிப்போன உறவினர்கள்.! புதுமனை புகுவிழாவில் அசத்திய கணவர்.!

By T BalamurukanFirst Published Aug 11, 2020, 11:50 PM IST
Highlights

ஷாஜஹான் தன் மனைவி மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டியதோடு கட்டிடக்கலைக்கு இன்று வரைக்கும் வரலாற்று பொக்கிஷமாக விளங்கி வருகின்றது.ஷாஜஹானைப்போன்ற பலபேர் தன் மனைவிக்காக சிலை வடித்துள்ளனர். இதுயெல்லாம் மனைவி மீது கொண்ட காதல் அன்பு ஆகியவற்றால் மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும். பிரபல தொழிலதிபர் தான் கட்டிய வீட்டிற்கு மறைந்த மனைவியின் உருவத்தை மெழுகு பொம்மையாக உருவாக்கி அவர் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்பது போன்று உருவாக்கியிருந்தது வரவேற்பை பெற்றுள்ளது.
 
கர்நாடகாவின் கோப்பாலா மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர், புதிதாக வீடு கட்டி அதற்குப் புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தன் மனைவியின் நினைவாக, அவரைப் போன்ற ஒரு சிலையை உருவாக்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அனைவரும், இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தன் மனைவி மாதவிக்குப் பிடித்தது போல அந்த வீட்டை உருவாக்கியுள்ளார் தொழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா. துரதிர்ஷ்டவசமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியை, கார் விபத்தில் பறிகொடுத்தார். இருப்பினும் அவர் நினைவாக, தன் அன்பை சிலை செய்து வெளிப்படுத்தியுள்ளார் குப்தா. நிகழ்ச்சியின் போது, வீட்டின் நடுவில் பிங்க் வண்ணத்தில் புடைவை கட்டி, சிரித்த நிலையில் மாதவி அமர்ந்திருப்பது போன்றே காட்சியளித்தது அந்தச் சிலை.

“என் வீட்டில் என் மனைவி மீண்டும் இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. இது அவருடைய கனவு இல்லம். அவருடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போலத்தான் இந்த மொத்த வீடும் கட்டப்பட்டது. இந்த வீட்டின் மொத்தக் கட்டுமானத்தையும் அவர்தான் மேற்பார்வையிட்டார்” என்று உணர்ச்சிப் பொங்க பகிர்ந்து கொள்ளும் ஸ்ரீநிவாஸ் குப்தா,

சிலையை உருவாக்கிய பின்னணி பற்றி ஶ்ரீநிவாஸ் பேசும் போது “பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் ஸ்ரீதர் மூர்த்தி, சிலையை செய்ய ஓராண்டு எடுத்துக் கொண்டார். மெழுகிற்கு பதிலாக சிலிகோன் பயன்படுத்தி சிலையை செய்துள்ளோம். வீட்டிற்கு உள்ளேயே வைத்துதான் சிலையை செய்து முடித்தோம். எங்களின் கட்டட வடிவமைப்பாளர் ரங்காண்ணான்வரின் உதவியுடன் அதைச் செய்தோம். என்றார்.நடக்கவோ பேசவோ முடியாது என்றாலும் மாதவியின் சிலை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

click me!