ரஷ்யா: கொரோனா தடுப்பூசி ரெடி.. மகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிரதமர் புதின்.!!

By T BalamurukanFirst Published Aug 11, 2020, 11:10 PM IST
Highlights

கொரோனா வைரஸ் அழிக்கும் தடுப்பூசியை எந்த நாடு முதலில் கண்டுபிடிக்கும் என உலக நாடுகளிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை உற்பத்தி செய்து முதல்  சாதனை படைத்துள்ளது என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அவருடைய மகளும் போட்டுகொண்டார் என தகவல் வெளிவந்துள்ளது.
 

கொரோனா வைரஸ் அழிக்கும் தடுப்பூசியை எந்த நாடு முதலில் கண்டுபிடிக்கும் என உலக நாடுகளிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை உற்பத்தி செய்து முதல்  சாதனை படைத்துள்ளது என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அவருடைய மகளும் போட்டுகொண்டார் என தகவல் வெளிவந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் மனிதனின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்து அனைத்து விஷயங்களையும் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகில் இரண்டு கோடி மக்களைப் பாதித்து, பல லட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த கொரோனா வைரஸ்க்கான, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் எந்த மருந்தும் அதிகாரபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கமலேயா (Gamaleya) ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசியின் பரிசோதனைகள் ஜூன் 18-ல் தொடங்கப்பட்டுள்ளன. 38 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் குழு ஜூலை 15-ம் தேதியும் இரண்டாம் குழு ஜூலை 20-ம் தேதியும் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த மருந்து சோதனை செய்யப்பட்ட அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெளியிடுவதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. `உலகில் முதல்முறையாக கொரோனா வைரஸ்க்கு எதிரான ஒரு தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது’ என ரஷ்ய அதிபர் புதின் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பாக அவர் பேசியபோது, ``இது உலகுக்கு மிகவும் முக்கியமானபணி, இந்தத் தடுப்பூசியின் வளர்ச்சியில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். இது மிகவும் திறம்படச் செயல்படுகிறது. நிலையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் இந்த மருந்து அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உருவாக்கியுள்ள இந்தப் புதிய தடுப்பூசி அந்நாட்டு அதிபரின் இரண்டு மகளில் ஒருவருக்கும் செலுத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் முதலில் முதியவர்களுக்கு இதைச் செலுத்தி சோதனை செய்து, அவர்களின் எதிர்ப்புச் சக்தி சோதிக்கப்படும், பிறகு அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இது வெளியிடப்படும் என ரஷ்ய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் இரண்டு கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 லட்சத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.

இந்த கொரோனாவை அழிக்க இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, கனடா போன்ற உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியது. தற்போது பல நாடுகள் மனிதர்கள் மீது இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கிறது.இந்த சமயத்தில் தான் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் கொரோனவுக்கான எதிரான தடுப்பூசி தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதனிடம் பரிசோதனை செய்ததில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகில் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து ரஷ்யா பதிவு செய்துள்ளது.

இதைப் பற்றி ரஷ்ய அதிபர் விளாடிமி புதின் பேசும் போது... "கொரோனாவுக்கான தடுப்பூசியை உலகில் முதல் முதலாக உற்பத்தி செய்து இருக்கிறோம். தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

click me!