கொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

Published : Aug 11, 2020, 09:34 PM IST
கொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

சுருக்கம்

3ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக ஒதுக்கி தரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.   

3ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக ஒதுக்கி தரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள, தமிழகம் உட்பட, 10 மாநில முதல்வர்களுடன், இன்று காலை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பு உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நோய் தொற்றை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதட, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்தியப்பிரதேச, முதல்வர் உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. நேற்றைய நிலவரப்படி 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 69.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்னர், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி