
தமிழ்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காஞ்சி சங்கர மடம் பகுதி முழுவதும் போலீசார் தங்களது கஸ்டடிக்குள் கொண்டு வந்துள்ளனர். சங்கராச்சார்யர்கள றாரும் வெளியில் செல்லக்கூடாது என தடைவித்துள்ளதால் ஜயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் மடத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காஞ்சி சங்கர மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் முயன்று வருகின்றன. இதனால் சங்கர மடம் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அமைப்பு போராட்டம் நடத்தலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தையடுத்து காஞ்சிமடம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.
மடத்தைச்சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கராச்சார்யர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பக்தர்கள் மடத்திற்குள் செல்லவும் தடைவித்க்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான பக்தர்கள் மட்டும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே மடத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதே போல் ஜயேந்திரர், விஜயேந்திரர் உட்பட மடத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருந்த வெளி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து காஞ்சி சங்கரமடம் பகுதி முழுவதும் களையிழந்து காணப்படுகிறது.