" நமக்கு மனிதநேயம்தான் முக்கியம்" .. பேட்டி கொடுத்து வைரலான சிறுவனக்கு வீடு.. முதல்வர் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2022, 5:20 PM IST
Highlights

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் எனது பையன்  பேட்டி கொடுத்து இரண்டு நாள்தான் ஆகுது, அதுக்குள்ள இப்ப வீட்டையே காலி பண்ண சொல்லுறாங்க, அவன் மனசுல பட்டத பேசினான், யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல இப்போ எங்கள வீடு காலி பண்ண சொல்லுறாங்க,

நம் மக்களுக்கு மனிதநேயம் தான் முக்கியம், சாதி மத கலவரம் நமக்கு எதற்கு என யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து  வைரலான சிறுவன் அப்துல் கலாமுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் அப்துல்கலாம் என்ற சிறுவன் ஒரு தனியார் ஊடகத்தில் பேசிய பேச்சு  பலரையும்  ஈர்த்து வருகிறது.

சென்னை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த  சிறுவன் தான் அப்துல் கலாம், ஏழாம் வகுப்பு படித்து வருகிறான், இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அச்சிறுவன் அளித்த பேட்டி  பலரையும் ஆழ் மனதை பிடித்து உலுக்கி எடுத்துவருகிறது என்றே சொல்லலாம். வாழ்வில் உங்களுக்கு பிடிக்காத நபர் என்றால் அது யார்  என்று சிறுவனிடம் எழுப்பட்ட கேள்விக்கு.. " முதல்ல யாரையும் பிடிக்காது என்று சொல்லாதீங்க, என்னையும் எல்லோரும் பல்லன்னு தான் கூப்பிடுவாங்க, நான் ஏன் எல்லோரையும் பிடிக்காதென்று சொல்லணும், எல்லாரும் எனக்கு நண்பர்கள் மாதிரி தான்.. இந்தியா ஒரு ஒற்றுமையான நாடு என்று சொல்லுகிறார்கள், நாம ஒற்றுமை இல்லாமல் இருந்தால் எப்படி? என்று எதார்த்தமாக அச்சிறுவன் எழுப்பிய வினா பலரையும் திணறடித்து விட்டது. 

இதேபோல் ஹிஜாப் பிரச்சினை குறித்து அப்துல் கலாமிடம் சில கேள்விகள் கேட்கப் பட்டதற்கு, " சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு? இதெல்லாம் இங்கே தேவையில்லை, எல்லோரும் இங்கே இந்தியர்கள்தான், ஒரே மாதிரிதான், பிறப்பு என்பது அனைவருக்கும் பொதுவான சம்பவம், எல்லோருக்கும் ரத்தம் கலர் ஒன்றுதான், நமக்கு முன்னோடியாய் இருந்தவங்க சாதி மதம் என்று சொல்லிக் கொடுத்து விட்டார்கள் அதனால இப்ப வரைக்கும் சாதி பற்றி நாம பேசிக்கிட்டு இருக்கோம். நமக்கு மனிதநேயம்தான் முக்கியம், மதம்தாண்டி மனித நேயத்தோடு இருக்கனும், மதமெல்லாம் கூடாது என திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு அவன் பதில் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, பொதுமக்கள் பலரும் அந்த சிறுவனின் பேச்சை கேட்டு வாயடைத்துப் போயினர், பலரும் அந்த சிறுவனை வாழ்த்தினார்... இந்நிலையில் திடீரென அச்சிறுவனின் குடும்பத்தார் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி ஹவுஸ் ஓனர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் எனது பையன்  பேட்டி கொடுத்து இரண்டு நாள்தான் ஆகுது, அதுக்குள்ள இப்ப வீட்டையே காலி பண்ண சொல்லுறாங்க, அவன் மனசுல பட்டத பேசினான், யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல இப்போ எங்கள வீடு காலி பண்ண சொல்லுறாங்க, நாங்க எப்படி வெளியே போவோம், இவன்  பேட்டி எல்லாருக்கும் போயிருக்கு இனி எங்களுக்கு யார் வீடு கொடுப்பாங்க, மனித நேயம் வேண்டும் என்றுதானே பேசினான், இங்க யாருகிட்டயும் மனிதநேயம் இல்லங்க என கண்ணீர் வடித்தார். மனித நேயம் குறித்து பேசியதற்காக அந்த சிறுவனின் குடும்பம் மனிதநேயம் இல்லாத வீட்டு உரிமையாளரால் காலி செய்யச்சொல்லி நிர்பந்திக்கப்பட்டது. சிறுவனின் தாயார் தங்களுக்கு நேர்ந்த நிலை குறித்து கண்ணீர் பேட்டி கொடுத்தார். அதுவும் வைரலானது, பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில்தான் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமை அவரது பெற்றோருடன் அழைத்து பேசினார். அப்போது அவருக்கு முதலமைச்சர் பரிசு ஒன்றையும் வழங்கினார். பேச்சையும் செயலையும் எல்லா காலமும் கடைபிடிக்க வேண்டும் என சிறுவனுக்கு முதலமைச்சர் அறிவுரை கூறினார். அப்போது சிறுவனின் பெற்றோர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார் முதல்வர், அப்போது அரசு சார்பில் வீடு வழங்க சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனே பரிசீலித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவன் கலாம் குடும்பத்திற்கு வீடு வழங்க உத்தரவிட்டார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தகவல் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!