இந்திய மக்களை காப்பாற்ற நம்மிடம் சொந்த விமானம்கூட இல்லை.. பாஜக அரசின் வெட்க கேடு.. கொந்தளித்த அழகிரி.

Published : Feb 25, 2022, 02:58 PM ISTUpdated : Feb 25, 2022, 03:02 PM IST
இந்திய மக்களை காப்பாற்ற நம்மிடம் சொந்த விமானம்கூட இல்லை.. பாஜக அரசின் வெட்க கேடு.. கொந்தளித்த அழகிரி.

சுருக்கம்

அவரை தொடர்ந்து பேசிய கே.எஸ். அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி பற்றி பெரிதாக விமர்சிக்க தேவை இல்லை எனவும், அது எழுதி வைக்கப்பட்ட  ஒன்று என அவர் கூறினார். மேலும் பஜாவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட உறவு தான் இந்த தோல்விக்கு காரணம் என தெரிவித்தார்.  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று என்றும், உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை காப்பாற்ற நம்மிடம் சொந்த விமானம்கூட இல்லை என்பது கொடுமை என்றும், நாட்டை ஆட்சி செய்வதற்கே பாஜகவுக்கு தகுதி இல்லை என்றும் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா ஆலோசனை நடத்தினார். சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம் தேதி தமிழகம் வர இருக்கும் ராகுல் காந்தியை வரவேற்கும் நிகழ்ச்சிகள்  குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சென்னையில் துணை மேயர் பதவி கேட்ட இருப்பதாகவும் அது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, 28ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் கலந்துரையாடுகிறார். எனவே அவர் வருகை குறித்தும் அதற்கான ஏற்பாடுகளை குறித்தும் இன்று ஆலோசித்தோம் என்று கூறினார். வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், திமுக - காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக  செயல்பட்டு வருகிறது, எதிர் காலத்திலும் கூட்டணி தொடரும் என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய கே.எஸ். அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி பற்றி பெரிதாக விமர்சிக்க தேவை இல்லை எனவும், அது எழுதி வைக்கப்பட்ட  ஒன்று என அவர் கூறினார். மேலும் பஜாவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட உறவு தான் இந்த தோல்விக்கு காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  முதலமைச்சரின் புத்தக வெளியீடு விழாவிற்கு ராகுல் காந்தி வருகிறார் எனவும், வெற்றி பெற்ற உறுப்பினர்களை சந்தித்து விவாதிக்க இருக்கிறார் என அவர் தெரிவித்தார். ரபேல் விமானம் வாங்குவதை விட, நமது சொந்த விமானங்கள் இருக்கிறது அதனை சிறக்கப்பாக செயல்படுத்தலாம் என பல முறை கூறினோம், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மோடியும் அவரது கட்சியும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. உக்ரைனில் தவிக்கும் இந்திய மக்களை காப்பாற்றி மீட்டு வர நம்மிடம் சொந்த விமானம்கூட இல்லை என்பது பாஜக நாட்டை ஆட்சி செய்ய தகுதியே இல்லை என்பதை காட்டுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

PREV
click me!

Recommended Stories

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!