பாஜகவை பலிகாடவாக்க சரத்பவாருடன் நாடகமாடிய அஜித் பவார்... ப்ளானை சக்சஸ் ஆக்கிய அண்ணணை கட்டியணையத்து வரவேற்ற தங்கை..!

By vinoth kumarFirst Published Nov 27, 2019, 12:33 PM IST
Highlights

அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பதவியில் தொடர்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன்தான் இருப்பார் என்றும், சரத் பவார் அவரை மன்னித்துவிட்டார் என்று மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சனிக்கிழமை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்நாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது. இதையடுத்து, துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதேபோல, தங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் நேற்று மாலை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே டிசம்பர் 1-ம் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். எம்.எல்.ஏ-களுக்கு தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

இதில், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் எம்.எல்.ஏவாக பதவியேற்று கொண்டனர். சட்டப்பேரவையில் பதவியேற்று வெளியே வந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சரத் பவார் மகள் சுப்ரியா புன்னகையுடன் வரவேற்றார். அப்போது அஜித் பவார் வெளியே வந்த போது அவரை அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பதவியில் தொடர்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளேன் என அஜித் பவார் செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார். ‘நான் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. சரியான நேரம் வரும்போது பேசுவேன். நான் முன்பே சொன்னேன், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன், எப்போதும் இக்கட்சியில்தான் இருப்பேன். இதில் குழப்பத்திற்கு இடமில்லை’ என அஜித் பவார் கூறினார்.

click me!