
மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் அதிகரித்துவிட்ட நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று எச். ராஜா டுவிட் செய்ததும் போதும் வழக்கம்போல் நெட்டிசன்கள் கலாய்க்க படையெடுத்து விட்டனர்.
கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றும் இன்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளிடம் அரசு நிலைமையையும் கேட்டறிந்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆளுநரின் நடவடிக்கைக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்தார்.
இதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் போட்டார்.
அதில், மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் அதிகரித்துவிட்ட நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
உடனே வழக்கம்போல் நெட்டிசன் ஹெச்.ராஜாவை கடுப்பேற்றும் வகையில் பதில் டுவிட் போட ஆரம்பித்து விட்டனர்.
அதாவது அப்படியே பிரதமர் வேலையையும் ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், மேதகு குடியரசு தலைவர் CBI, IT, NSA, RBI மற்றும் மத்திய அரசின் துறைகளை ஆய்வு செய்ய மோதியை அனுமதிக்க சொல்லுங்கள் ராசாஆஆஆஆ...என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், பலவீனமான 'டெட்பாடி' அரசு நடப்பதால் மாநில உரிமைகளில் தலையிட்டு ஏறி மிதிக்கிறீங்க! அடுத்து ஆட்சிக்கு வரும் திமுகவிடம் உங்க பருப்பு வேகாது ராசா! "மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி" இதுவே திமுகவின் தாரக மந்திரம்! என தெரிவித்துள்ளார்.