ஜெயலலிதாவை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா ? அமைச்சரின் திடுக் தகவல் !!

Published : Nov 11, 2018, 07:12 AM ISTUpdated : Nov 11, 2018, 07:14 AM IST
ஜெயலலிதாவை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா ? அமைச்சரின் திடுக்  தகவல்  !!

சுருக்கம்

நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, கொடுக்க கூடாத மருந்துகளை கொடுத்து, ஸ்லோ பாய்சன்' மூலம் கொலை செய்தது டி.டி.வி.தினகரன் கும்பல் தான் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக குற்றச்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக செல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர் தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் இந்த ஆட்சியைக் கலைக்கவோ, கவிழ்க்கவோ முடியவில்லை என்றார்.


ஒரு வழக்கில், தன்னை விடுவித்துக்கொண்டு, ஜெயலலிதாவை சிக்க வைத்தவர் தான் டி.டி.வி. தினகரன். இது தெரிந்ததும், அவரை வீட்டை விட்டு துரத்தினார்.

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருக்கும் போது  அவருக்கு சர்க்கரை வியாதியை அதிகரித்து, அதற்கு எந்த மருந்தையெல்லாம் கொடுக்கக் கூடாதோ, அவற்றை கொடுத்து, 'ஸ்லோ பாய்சன்' என்று சொல்வார்களே, அப்படி மெதுவாக விஷம் ஏற்றி கொலை செய்தது தினகரன் கும்பல் என ஓபனாக குற்றம்சாட்டினார்.

அந்த கும்பலுடன், நிலக்கோட்டை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்கதுரையும் சென்றுள்ளார். இந்த ஆட்சிக்கு துரோகம் செய்த அவருக்கு, தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு