பாஜகவுடன் கூட்டணிக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் !! அவர் வைக்கிற ஒரே கண்டிஷன் இதுதானாம் !!

Published : Nov 10, 2018, 07:49 PM IST
பாஜகவுடன் கூட்டணிக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் !! அவர் வைக்கிற ஒரே கண்டிஷன் இதுதானாம் !!

சுருக்கம்

விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், பாஜகவுடன் கூட்டணிக்கு ரெடி சொல்லிவிட்டாலும் அவர் வைக்கும் ஒரே கண்டிஷனைக் கேட்டு அவர்கள் ஆடிப்போயிருக்கிறார்களாம். அது என்ன கண்டிஷன் தெரியுமா? பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது என்பது தானாம்.

இதற்கு ரஜினி சொல்லும் காரணம், கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் மோடி மீதுள்ள கடும் அதிருப்திதான் என்கிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அல்லது உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணிக்கு ரெடி என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். தலைமையும் அண்மைக் காலமாக மோடிக்கு பதிலாக வேறு யாரையாவது அடுத்து வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சிந்தனையில்தான் உள்ளது என கூறப்படுகிறது.

அவர்களும் நிதின் கட்கரியை அறிவிக்கலாமா என்று நினைக்கிறார்களாம். எதைச் செய்தாவது பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மூலமாக ரஜினிக்கு தூதுவிட்டதாகவும், அவரிடத்தில் தனது மனக்குறைகளை ரஜினி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேட்ட திரைப்படத்துக்காக வாராணாசி சென்றிருந்த போதும், ரஜினி உ.பி.முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போதும் இது குறித்து ரஜினி அவரிடம் விவாதித்துள்ளார்.

இந்நிலையில் தனது புதிய கட்சியின் பெயர்  குறித்த அறிவிப்பை ரஜினி விரைவில் வெளியிட உள்ளதாகவும், ஜாதக ரீதியில் அது முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரஜினியின் ஆட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் கூட்டணி குறித்து பாஜக என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!