பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடாது என சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டாரா? ஸ்டாலின் !! எடப்பாடி சரமாரி கேள்வி…

Published : Nov 10, 2018, 08:42 PM ISTUpdated : Nov 10, 2018, 10:00 PM IST
பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடாது என சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டாரா? ஸ்டாலின் !! எடப்பாடி சரமாரி கேள்வி…

சுருக்கம்

பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்டாலின் கேள்வி எழுப்பினாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் , சந்தர்ப்பவாத கூட்டணியை திமுக அமைக்கிறது என கூறியுள்ளார்.   

இது தொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர் னெ தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது 234 தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவை உடைக்க எதிரிகளுடன் சதி செய்து கொண்டிருப்பவர் தினகரன். தான் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நாட்டின் நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா ? தமிழகத்திற்கு ஆந்திரா தர வேண்டிய தண்ணீர் குறித்து ஸ்டாலின் கேட்டாரா ? நாங்கள் கொள்கையுணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால் திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும் என கடுமையாக குற்றம்சாட்டினர்.. 


64 வயதான கமலுக்கு திரைஉலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார், இது எடுபடாது எனவும் அவர் கூறினார்.

சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது, அதை  மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்

விலையில்லா திட்டத்தை சர்கார் திரைப்படம் அவமதிக்கிறார்கள். இதனை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள் என குறிப்பிட்டார்.

இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம் அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா?  எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு