ரூ. 1000 கோடி விலையில் தியேட்டர் எப்படி வந்தது? விவேக்கை துருவும் ஐ.டி.அதிகாரிகள்...!

First Published Nov 11, 2017, 3:51 PM IST
Highlights
How to buy jazz cinemas theater worth Rs.1000 crore


ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? என வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து வருமான வரித்துறை தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். 

சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனை நேற்று முந்தினம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த சோதனையை 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர். 

ஆனால் நேற்று மட்டும் 40 இடங்களில் சோதனை முடிவுற்று 147 இடங்களில் தொடர்ந்தது. மூன்றாவது நாளான இன்று 137 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதில், ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? என வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கை துருவி வருகின்றனர். 

click me!