தொண்டர்களை நீக்கினால் கட்சி எப்படி வலுவாக இருக்கும். இபிஎஸ்சை வெறுப்பேற்றும் சின்னம்மா.

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2021, 6:32 PM IST
Highlights

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்றால் அதற்கு தான் வரவேண்டும் எனவும், நிச்சயம் தொண்டர்கள் ஆதரவுடன் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். 

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்றால் அதற்கு தான் வரவேண்டும் எனவும், நிச்சயம் தொண்டர்கள் ஆதரவுடன் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். 

கட்சி தொண்டர்களுடன் பேசியுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக தெரிவித்த சசிகலா, தற்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுக தொண்டர்களுடன் பேசி அதற்கான  ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. கொரோனா தாக்கம் முடியட்டும், கட்டாயம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சித் தொண்டர்களை சந்தித்து, விரைவில் கட்சியை காப்பாற்றுவேன் என அவர் அதில் கூறி வருகிறார்.அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோ வெளியாவதையடுத்து, சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்தே தூக்கம் வேலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக தொண்டர்களில் ஒருவரான மாலதி பழனி ராஜ், 

என்பவரும் ச சிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் ச சிகலா பேசியிருப்பதாவது: நான் பொதுச்செயலாளராக பதவியேற்று உடனே கூறியிருந்தேன் ஒரு மரத்தின் இலை காய் கனி எல்லாம் வெளியே தெரியும் ஆனால் அதன் வேர் வெளியே தெரியாது அது போல தான் அதிமுக உடைய வேர் தொண்டர்கள் தான். தொண்டர்களின் உழைப்புதான் அதிமுகவின் உயிர்நாடி, அவர்களை கண் இமை போல பாதுகாக்க வேண்டும் அதுதான் நல்ல தலைமைக்கு அழகு. மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு வேரை வெட்டுகின்றனர். தினந்தோறும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி கொண்டிருந்தால் எப்படி அந்த மரம் செழிப்பாக இருக்கும்.

இவர்கள் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை. தவறு செய்கிறார்கள். இப்படியே தொண்டர்களை நீக்கிக் கொண்டே இருந்தால் எப்படி இவர்கள் கட்சியை செழிப்பா வழி நடத்துவார்கள் எப்படி ஆட்சி அமைப்பார்கள் அதற்காகத்தான் நான் வர வேண்டும் என நினைக்கிறேன். தொண்டர்களின் தியாகத்தால் தான் இந்த கட்சி மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிறது. இப்படி அவர்களை நீக்கிக் கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது இவர்களுக்கு புரியும். நிச்சயமாக நான் வருவேன் மீண்டும் இந்த கட்சியை ஆட்சி அமைக்க வைப்பேன். இதனை தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுடைய துணையுடன் நடத்தி காண்பிப்பேன் என கூறியுள்ளார். 

இதேபோல் தேனியைச் சேர்ந்த - அமர் நாத் என்பவரும் அவர் பேசியுள்ள அடியோவில், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சந்திப்பேன் இப்போது இருக்கக்கூடிய நிலைமையை நிச்சயம் மாற்றுவேன், எல்லோருக்கும் நல்லது செய்து விட்டுதான் பெங்களூருக்கு சென்றேன், ஆனால் இவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தொண்டர்களை நடத்துகிறார்கள்.18 சட்டமன்ற உறுப்பினர்களை இவர்கள் நீக்கி இருக்க வேண்டாம், ஏனெனில் அம்மா அவர்கள் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு ஜெயிக்க வைத்தார்கள்.ஒரு முடிவு எடுக்கும் பொழுது பொதுநலனுடன், கட்சி நலனையும்  சேர்த்து பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். 
 

click me!