வசமாக சிக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... 3வது நீதிபதி நியமனம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2021, 5:58 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி நியமனமிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி நியமனமிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க 3-வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.டி.ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணைத் தலைவரானது முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், 3-வது நீதிபதியாக எம்.நிர்மல்குமாரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!