எப்படி வென்றிருந்தாலும், வெற்றி வெற்றியே!: - மோடிக்கு ஷாக் கொடுத்த ஸ்மிருதி இரானி... 

First Published Dec 19, 2017, 4:59 PM IST
Highlights
How political leaders comments to the Gujarat Himachal election results


2019-ல் மோடி தன் இந்த ஆட்சி காலத்தை முடிந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தல் எனும் அக்னி பரீட்சையில் இறங்க இருக்கிறார். அதற்கு முன் இந்த தேசத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களுமே நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட தேர்வுகளாகவும், மோடியின் ஆட்சி குறித்து மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தும் உரைகல்லாகவுமே பார்க்கப்படுகின்றன. 

இந்நிலையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் காங்கிரஸின் கையிலிருந்த இமாச்சல் பிரதேசம் இரண்டின் பொது தேர்தல்களிலும் பா.ஜ.க.வே வென்றிருப்பது மோடியை தனது சிம்மாசனத்தில் அமர்ந்தபடி மீண்டும் ஒருமுறை கர்ஜிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் குஜராத்தில் பி.ஜே.பி.யை நெருக்கி விரட்டி, ஒரு மரண பீதியை அதற்கு காங்கிரஸ் கிளப்பியிருக்கிறது என்றால் அதில் பொய்யில்லை. அந்த வகையில் காங்கிரஸின் புதிய இளம் தலைவரான ராகுல் தலை நிமிர்கிறார் சற்று. 

இந்நிலையில், இரு மாநில தேர்தல் முடிவுகள் பற்றி பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் என இரண்டு பெரும் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உதிர்த்திருக்கும் கருத்துக்கள் இதோ...

*    ’அனைவருடனும் இணைந்து, அனைவரின் நலனுக்காக.’ எனும் எங்களின் கோஷத்தின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-    நிர்மலா சீதாராமன் (ராணுவ அமைச்சர்)

*    மோடியால் மட்டுமே அமைதியையும், வளர்ச்சியையும் தரமுடியும் என்ற மக்களின் நம்பிக்கையை இந்த இரு மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
-    தேவேந்திர பட்னாவிஸ் (மஹாராஷ்டிர முதல்வர்)

*    குஜராத் மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர். மோடியின் தலைமை, அமித்ஷாவின் நிர்வாக திறனுக்கு கிடைத்த வெற்றி இது.
-    வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முதல்வர்)

*    மோடியின் மேஜிக் மீண்டும் வேலை செய்துள்ளது. காங்கிரஸின் புதிய தலைவர் ராகுல் தன் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆகிவிட்டார்.
-    மனோகர் பாரீக்கர் (கோவா முதல்வர்)

*    காங்கிரஸின் புதிய தலைவர் ராகுலுக்கு கிடைத்த பரிசுதான் குஜராத் தேர்தல் முடிவு. குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில்தான் பி.ஜே.பி. தப்பிப் பிழைத்துள்ளது.
-    அசோக் கெலாட் (காங்., மூத்த தலைவர்)

*    குஜராத் தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த சகோதர, சகோதரிகள் அவேசத்துடனும், கண்ணியத்துடனும் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி களப்பணியாற்றினர். அவர்களுக்கு நன்றி!
-    ராகுல் (காங்கிரஸ் தலைவர்)

*    மக்கள் ஓட்டுக்களால் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியடையவில்லை. மின்னணு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வென்றுள்ளது.
-    சஞ்சய் நிரூபம் (மும்பை காங்கிரஸ் தலைவர்)

*    குஜராத்தில் தட்டுத்தடுமாறி, பி.ஜே.பி. ஆட்சி அமைக்கலாம். ஆனால் இந்தத் தேர்தல் அவர்களுக்கு கிடைத்துள்ள தார்மீகத் தோல்வி. குஜராத் மக்கள் 2019 தேர்தலுக்கான பூனைக்கு மணி கட்டியுள்ளனர். 
-    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

*    குஜராத்தில் பி.ஜே.பி.க்கு மிகப்பெரிய தோல்வியை தருவோம் என்று கூறிய காங்கிரஸ், ஹிமாச்சல பிரதேசத்திலும் தோல்வியடைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் வென்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.
-    நிதிஷ் குமார் (பீஹார் முதல்வர்)

*    கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்க இருக்கும் வெற்றியானது, காங்கிரஸின் புதிய தலைவர் ராகுலுக்கு பெரும் பரிசாக அமையும்.

*    குஜராத்தில் பி.ஜே.பி.யின் தொகுதிகள் குறைந்துள்ளன. அதே வேளையில் காங்கிரஸ் வென்றுள்ள தொகுதிகள் அதிகரித்துள்ளன. இது காங்கிரஸ் தலைவர் ராகுலின் அரசியலில் புதிய துவக்கம்.
-    கமல்நாத் (மூத்த தலைவர் - காங்கிரஸ்)

*    வெற்றி எவ்வாறு இருந்தாலும் அது வெற்றியே. இது வளர்ச்சிக்கான வெற்றி. குஜராத்தில் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட அதிகம் வென்றிருந்தாலும், பி.ஜே.பி.தான் ஆட்சி அமைக்கிறது. வென்றவர்தான் அரசர்.
-    ஸ்மிருஷி இரானி (மத்தியமைச்சர் - பி.ஜே.பி.)

click me!