நாங்கள் எப்படி தேர்தலில் வேலை செய்வது..? கமல் கட்சிக்குள் வெடிக்கும் கலகம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2022, 1:06 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தற்போது முதலே தீவிரமாக தேர்தல் பணிக்கு தயாராகி வருகின்றனர்.

நேர்காணலே நடத்தாமல் ஒரு கட்சி வேட்பாளர்களை அறிவித்தும், அறிவிக்கவும் இருப்பதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் மய்யமான நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம். இரண்டாம் கட்ட பட்டியலையும் வெளியிட்டு விட்டது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தற்போது முதலே தீவிரமாக தேர்தல் பணிக்கு தயாராகி வருகின்றனர். முக்கிய கட்சிகள் எல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே தொண்டர்களிடம் விருப்ப மனு வாங்கி, நேர்காணலை நடத்தி முடித்து விட்டது. கூட்டணி கட்சிகளுடன் பேசி முடித்து, தற்போது வேட்பாளர் அறிவிப்புக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருசிலர், தனக்கு தான் எப்படியும் சீட் என முடிவு செய்து, தற்போதே பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சேலம் மாவட்டதில் நடிகர் கமலஹாசன் கட்சியின் தேர்தல் மூவ்மென்ட் எல்லாம் ரொம்பவே அமைதியாக இருக்கிறது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடக்கிற எந்த விவகாரமும், எங்களுக்கு தெரியவில்லை என நிர்வாகிகள் சிலரே ஷாக் ஆகி இருக்கிறார்கள். நகர்ப்புற தேர்தலில் பலரும் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என ஆசை பட்டு இருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விருப்பமனு வாங்கி, வேட்பாளர் தேர்வே முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த விவகாரம், கட்சியில் உள்ளவர்களுக்கே பலருக்கும் தெரியவில்லை. 

விஷயத்தை தாமதமாக கேள்விப்பட்ட சிலர், இது எப்போது நடந்தது என புருவத்தை உசத்தி எதிர் கேள்வி கேட்கிறார்கள். இப்படி போனால் நாங்கள் எப்படி தேர்தலில் வேலை செய்வோம்? கட்சி எப்படி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது என்று புலம்புகிறார்கள் நிர்வாகிகள். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் தமிழ்நாட்டு நகரங்கள் அல்லாடுகின்றன. இவற்றைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட பட்டியலையும், இரண்டாம் கட்ட பட்டியலையும் வெளியிடுகின்றேன்.'' என்று தெரிவித்து இருந்தார்.

click me!