Rajnath Singh: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த விளக்கம்.!

By vinoth kumarFirst Published Dec 9, 2021, 11:55 AM IST
Highlights

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 வீரர்கள் உயிரிழந்தனர்.  பிபின் ராவத் மறைவுக்கு  நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, ஹெலிகாப்படர் விபத்தில் தொடர்பாக மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்டோர் பகல் 11.45 மணிக்கு புறப்பட்டனர். வெலிங்கடனை அடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் 12 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்ட உடன் விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். குரூப் கேப்டன் வருண் சிங் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வருண் சிங்கை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. 

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தொடர்பாக இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமை வகிப்பார். நேற்றைய தினமே விசாரணைக் குழுவினர் வெலிங்டனிற்கு சென்றடைந்து விசாரணையை தொடங்கிவிட்டனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்தப்படும். மற்ற ராணுவ வீரர்களின் உடல்களுக்கு உரிய ராணுவ மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!