தேனிலவு முக்கியமல்ல.. தேர்தல் தான் முக்கியம்... அதிரடியாக களத்தில் இறங்கி அடிக்கும் அமமுக வேட்பாளர்..!

Published : Mar 29, 2021, 03:05 PM IST
தேனிலவு முக்கியமல்ல.. தேர்தல் தான் முக்கியம்... அதிரடியாக களத்தில் இறங்கி அடிக்கும் அமமுக வேட்பாளர்..!

சுருக்கம்

 என் மனைவியுடன் நான் இன்னும் சரியாகக் கூட பேசவில்லை. தேன்நிலவுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டதாக வெட்கத்துடன் கூறுகிறார். 

திருமணம் முடிந்த உடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மனைவியுடன் சரியாக கூட பேசவில்லை என்று அமமுக வேட்பாளர் முரளிதரன் கூறியள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் டிடிவி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி  மங்கலம் தொகுதியில் போட்டியிடும் முரளிதரன் (45)  சமூக சேவைகளிலும் அரசியலிலும் அதிகமாக ஈடுபட்டு வந்ததால் பலரும் எனக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். 45 வயதாகிவிட்ட நிலையில் கடந்த பிப்ரவரி-3 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, மார்ச் 18ம் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 19ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அன்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்;-  என் மனைவியுடன் நான் இன்னும் சரியாகக் கூட பேசவில்லை. தேன்நிலவுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டதாக வெட்கத்துடன் கூறுகிறார். தான் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு முறையாக நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வாங்கித் தருவேன், அரசு துறையில் காலியாக உள்ள 9000 அரசை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தொகுதி அலுவலகம் வைத்து மக்களை நேரடியாக சந்திப்பேன்.

கிராமங்களில் தேவைக்கேற்ப கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும், சிறுவர்கள்- இளைஞர்கள்- முதியவர்கள் ஆகியோர் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தேர்தலை அறிக்கைகளை வெளியிட்டுள்ள அவர் தனது தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளார். நான் வெற்றி பெற்றால், மக்கள் என்னைத் தேடி வரும் தேவை இருக்காது. நானே அவர்களைத் தேடிச்சென்று சேவையாற்றுவேன். சின்ன வயது முதலே எனக்கு அரசியலை விட்டால் வேறொன்றும் தெரியாது என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!