நீட் அனிதாவிற்கு ஒரு நியாயம்? அரியலூர் மாணவிக்கு ஒரு நியாயமா? திமுகவை திமிர விடாமல் அடிக்கும் எச்.ராஜா.!

By vinoth kumarFirst Published Jan 25, 2022, 6:45 AM IST
Highlights

அரியலூர் சிறுமி மரணம் விவகாரத்தில், கிறிஸ்தவ பள்ளிகள் மதமாற்ற கேந்திரமாக மாறிவிட்டது. கட்டாய மதமாற்றம் இல்லை என்று கூறும் மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியதை நம்ப நாங்கள் தயாராக இல்லை.

அனிதாவுக்காகக் கூச்சல் போட்ட நபர்கள் எல்லாம் இப்போது எங்கே உள்ளனர். அனிதாவுக்கு ஒரு நியாயம். அரியலூர் மாணவிக்கு ஒரு நியாயமா? என எச்.ராஜா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி , மாநில நிர்வாகிகள் மாற்றம் , அரியலூர் சிறுமி மரணம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- அரியலூர் சிறுமி மரணம் விவகாரத்தில், கிறிஸ்தவ பள்ளிகள் மதமாற்ற கேந்திரமாக மாறிவிட்டது. கட்டாய மதமாற்றம் இல்லை என்று கூறும் மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. தமிழகத்திற்கு கட்டாய மதமாற்றத் தடை சட்டம் வேண்டும். மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம் என்றார்.

மேலும், அனிதாவுக்காகக் கூச்சல் போட்ட நபர்கள் எல்லாம் இப்போது எங்கே உள்ளனர். அனிதாவுக்கு ஒரு நியாயம். அரியலூர் மாணவிக்கு ஒரு நியாயமா? அதேபோல இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு வீடியோ எடுத்த நபரையும் கைது செய்யத் போலீஸ் முயல்கிறது. திட்டமிட்டுக் குறிப்பிட்ட பிரிவினரை மிரட்ட இந்த திமுக அரசு முயல்கிறது.

அதேபோல திமுக ஆட்சியில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்கிறது. மதுரையில் 150 ஆண்டுகள் பழைமையான முனீஸ்வர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்தவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனரா என்பதே சந்தேகமாக உள்ளது. திமுக வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசுக்கு மமதை இருக்கக்கூடாது. அதிமுக ஆட்சியிலும் தான் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போது எந்த விதமான குற்றச்சாடுகளும் எழவில்லை. ஆனால், இப்போது அனைத்து இடங்களிலும் பொங்கல் பரிசுப் பொருள்கள் தரமற்றவையாக உள்ளதாக புகார்கள் குவிந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

click me!