குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? அமைச்சர் நாசர் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jan 25, 2022, 6:03 AM IST
Highlights

கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முந்தைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதல்வரின் தேர்தல் அறிக்கை. அந்த வகையில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான நியமனங்கள் தொடர்பாகவும் பணி நியமனங்களுக்காக மூன்று கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக விதிகளை மீறி பணி நியமனம் பெற்ற 236 பேர் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் பண்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை காரைக்குடி பால்பண்ணையின் மூலம் குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தி இரண்டு மாவட்ட நுகர்வோர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஆவின் பால் நிறுவனத்தில் அதன் விரிவாக்கம், மற்றும் செயல்பாடுகள் குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர்;- கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முந்தைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதல்வரின் தேர்தல் அறிக்கை. அந்த வகையில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான நியமனங்கள் தொடர்பாகவும் பணி நியமனங்களுக்காக மூன்று கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால்  உற்பத்தி 36 லட்சம் லிட்டராக இருந்தது,  தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது, இதேபோல கடந்த ஆட்சியில் ஆவின் பால் விற்பனை 26 லட்சம் லிட்டராக இருந்தது  தற்போது 28 லட்சம் லிட்டராக விற்பனை உயர்ந்துள்ளது. தோல், பட்டாசு தொழிற்சாலைகளில் தொடக்க பால் கூட்டறவு  சங்கங்களுக்கு வழங்க பட்டாசு வாங்கியதிலும் ஊழல் மற்றும்  வசூல் வேட்டை நடந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்காக ஊழல் புகார் குவிந்து உள்ளது.  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் செயல்படுத்துவார். பிற திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைபடுத்துவதை போல் அதையும் முதல்வர் செயல்படுத்துவார் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

click me!