இந்துமஹா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது.. தொழிலதிபரை கடத்திய வழக்கில் சிபிசிஐடி போலீஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 11:00 AM IST
Highlights

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் கோடம்பாக்கம் ஸ்ரீக்கு வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கும் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்து 2019 ஆம் ஆண்டு அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி அகில இந்திய இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், தொழிலதிபர் வெங்கடேசன், சீனிவாசராவ் உள்ளிட்ட ஆந்திராவை சேர்ந்த கும்பல் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியதாக 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை மாநகர போலீசார் இதில் ஈடுபட்டுள்ளதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது நிருபணமானால் அது குறித்து அறிக்கையை காவல் துறை இயக்குனருக்கு அனுப்பியது. இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டார். இதனையடுத்து. 

திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவகுமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் கோடம்பாக்கம் ஸ்ரீக்கு வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீதமுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பேரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் ஸ்ரீயை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தபோது. அப்போது அங்உ செய்தி சேகரிக்கச் வந்த தனியார் தொலைகாட்சி செய்தியாளரின் கைப்பேசியை பறித்து ஸ்ரீயின் ஆதரவாளர்கள் செய்தியாளரை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், செய்தியாளரை தாக்க முற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மொபைல் மற்றும் கேமராவை சேதப்படுத்திய கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் ஆதரவாளர்கள் குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

click me!