இது வெறும் ஆரம்பம் மட்டும்தான்... தமிழகத்தில் பாஜக பக்கம் ஆண்டவன்... அண்ணாமலை சூளுரை..!

Published : Jul 14, 2021, 11:00 AM IST
இது வெறும் ஆரம்பம் மட்டும்தான்... தமிழகத்தில் பாஜக பக்கம் ஆண்டவன்... அண்ணாமலை சூளுரை..!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிமனித கட்சிகள். பாஜக வை பொறுத்த வரை கூட்டு முயற்சி தான்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். 

தமிழ்நாட்டின் பா.ஜ.க, தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு, துணை தலைவராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவர், சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், 16ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக அண்ணாமலை, கோவையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.அண்ணாமலை, ‘’வயது முக்கியமல்ல. மூத்த இளம்தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். பாஜகவை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிமனித கட்சிகள். பாஜக வை பொறுத்த வரை கூட்டு முயற்சி தான். 2024 பாராளுமன்றத்தில் தமிழ்நாடு பாஜக எம்.பிக்கள் பலர் இடம்பெற்றிருப்பார்கள் ; இது ஆரம்பம் மட்டும்தான்; கடுமையாக உழைப்போம்; கட்சியைக் வளர்ப்போம்; ஆண்டவன் நம் பக்கம்’’என அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!