கொங்கு நாடு தனி மாநிலமாக வேண்டுமா..? குழம்பும் தமிழக பாஜக... திணறும் உளவுத்துறை..!

By Thiraviaraj RMFirst Published Jul 14, 2021, 10:48 AM IST
Highlights

பாஜக கொங்கு மாநிலம் குறித்து எந்த முடிவையுமெடுக்கவில்லை. ஒன்றிய அரசு என திராவிட கட்சிகள் முழங்கியதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே கொங்கு நாட் எனும் கோஷம் எழுப்பப்படுகிறது. 

கொங்கு நாடு யூனியன் பிரதேசமாக பிரிப்பது குறித்த விவாதிக்கப்பட்டதும் தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டு வருகிறது. பாஜக, திமுக இடையே பெரும் பரபரப்பு கிளமி உள்ளது.

 

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனவும், தமிழகத்தை தமிழ்நாடு எனவும் அழைத்து வருகின்றன. இந்நிலையில் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு என்கிற தனி மாநிலத்தி உருவாக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு திமுக தோழமை கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ’கொங்குநாடு குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில உளவுத்துறை அதிகாரிகள் உத்தரவு போட்டுள்ளார்கள். கோவை மண்டலம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கிறார்கள். 

தி.மு.க.,வினர் மட்டும் தான் கொங்குநாடு யூனியன் பிரதேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மற்ற அனைவரும் ஆதரவு தான் தெரிவித்து இருக்கிறார்கள் என அறிக்கையில் தெரிய வந்து இருக்கிறதாம். ஆனால், தமிழக அரசு விரும்புகிற மாதிரி அறிக்கை கொடுக்க வேண்டும் என அதை மாற்றி எழுதலாமா? என உளவுத்துறை உயர் அதிகாரிகள் யோசித்து வருகிறார்களாம். இதனிடையே, பாஜக முத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், ‘’பாஜக கொங்கு மாநிலம் குறித்து எந்த முடிவையுமெடுக்கவில்லை. ஒன்றிய அரசு என திராவிட கட்சிகள் முழங்கியதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே கொங்கு நாட் எனும் கோஷம் எழுப்பப்படுகிறது. மாநில மக்கள் விரும்பினால் அதற்கேற்றாற்போல மத்திய அரௌ நடவடிக்கை எடுக்கும்’’எனத் தெரிவித்துள்ளனர்.

ஆக மொத்தத்தில், கொங்கு மண்டலம் தனி மாநிலமாக உருவாவ தமிழக பாஜக தலைவர்களே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. 

click me!