இந்தி மொழி சூத்திரர்களுக்கு மட்டுமே.. வளர்ந்த மாநிலங்களின் தாய்மொழி இந்தி இல்லை.. திமுக எம்.பி சர்ச்சை..

By Thanalakshmi VFirst Published Jun 6, 2022, 3:38 PM IST
Highlights

இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது என்று திமுக எம்.பி  டி.கே.எஸ் இளங்கோவன் பேசி புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார்.  அதோடுமட்டுமல்லாமல் இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது என்று திமுக எம்.பி  டி.கே.எஸ் இளங்கோவன் பேசி புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வளர்ச்சியடையாத மாநிலங்களில் மட்டுமே இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு, மேற்கு வங்க, ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தாய் மொழி இந்தி கிடையாது என்று கூறி இருக்கிறார்.

மேலும், “இந்தி நம்மை சூத்திரர்களாக மாற்றும். இந்தி நமக்கு நல்லதல்ல.” என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஏப்ரலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் நடந்த பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில், இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்று கூறி இருந்தார்.

இதற்கு தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அதே போல் சமீபத்தில் இந்தி மொழி குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளம்பி வரும் நிலையில் , திமுக எம்.பி பேசியுள்ள கருத்து விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தயக்கம் ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!!

click me!