இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 35 இடங்கள். இமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவி வகித்து வருகிறார்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!
இமாச்சல பிரதேச சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 68 உறுப்பினர்கள் உள்ள சட்டபேரவையில், தற்போது பாஜகவுக்கு 43 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு சுயேச்சைகள் மற்றும் ஒரு சிபிஐ (எம்) எம்எல்ஏ உள்ளனர்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
காங்கிரஸ் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலால் குழப்பம் ஏற்பட்டால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு அதிக வாய்ப்புகள் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மியும் களத்தில் இருப்பதால் சூடு பிடித்துள்ளது.
இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!