திமுகவின் உட்கட்சிப் பிரச்னை நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது... ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!!

By Narendran SFirst Published Oct 23, 2022, 6:51 PM IST
Highlights

மதுரை மேயருக்கு எதிராக அமைச்சர் பி.மூர்த்தி உண்ணாவிரதம் இருப்பேன் என சொல்லியது திமுகவின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

மதுரை மேயருக்கு எதிராக அமைச்சர் பி.மூர்த்தி உண்ணாவிரதம் இருப்பேன் என சொல்லியது திமுகவின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் மேயரை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதாக அமைச்சரே தெரிவித்திருப்பது திமுக ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளையே காட்டுகிறது. ஒரு அமைச்சரே மாநகர மேயரிடம் உண்ணாவிரதம் இருப்பேன் எனக்கூறுவது ஏன் என தெரியவில்லை. அமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தன் கையில் நிர்வாகம் இல்லை எனும் இயலாமையை ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சர் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

அமைச்சரின் இயலாமையா, அரசியலா, உட்கட்சி விவகாரமா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் நிர்வாகம் முடங்கி செயல் இழந்துள்ளது. திமுகவின் உட்கட்சிப் பிரச்னையால் ஒட்டுமொத்த மதுரை மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. வாடிப்பட்டி அதிமுக சேர்மன் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பது தெரிகிறது.

இதையும் படிங்க: துணை வேந்தர் நியமன முறைகேட்டை தடுக்காதது ஏன்..? ஆளுநருக்கும் தொடர்பா.? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

மாணவிகளை ரயிலில் பிடித்து தள்ளுகிறார்கள். மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது. காவல்துறையை சுதந்திரமாக விட்டால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். 30 நாள்களில் 50 கொலைகள் நடக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் முதல்வர் பேச மறுக்கிறார். மேயருக்கு எதிராக அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பதாக சொன்னால், மக்கள் சாகும் வரை உண்ணாவிரதம்தான் இருக்கவேண்டும். இப்படி இருந்தால், எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்று தெரிவித்தார். 

click me!