அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ்-ன் வழக்கு... ஜூன்.8 தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Apr 24, 2023, 6:18 PM IST

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு விசாரணையை ஜூன்.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு விசாரணையை ஜூன்.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: யாருக்குக் கல்யாணம்? ராகுல் படத்துடன் திருமண அழைப்பிதழ் கொடுத்த காங்கிரஸ் தலைவர்!

Tap to resize

Latest Videos

கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 ஆம் நாளாக விசாரணை நடைபெற்றது. வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  வாதாடினார். அப்போது, பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பழங்குடியின பெண் மீது காலணி தாக்குதல்; திமுகவினர் அதிகார மமதையில் உள்ளனர் - அண்ணாமலை சாடல்

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தபின் எடுக்கப்படும் அதிமுகவின் அனைத்து முடிவுகளும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று விளக்கமளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

click me!