கர்நாடக தேர்தலில் புலிகேசிநகர் தொகுதியில் போட்டியிட இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார்.
கர்நாடக தேர்தலில் புலிகேசிநகர் தொகுதியில் போட்டியிட இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார். கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பொது நிகழ்வுகளில் மதுவா? இது சமுதாய சீரழிவு.. திமுக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு..!
அதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அதிமுக பெயரில் ஏற்கப்பட்டிருந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரும் வாபஸ் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி சாராய கடை திறந்தார்! ஸ்டாலினோ கல்யாண மண்டபத்தில் மது கூடம் அமைக்கிறார்.!இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்
இதுக்குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர் அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரும் வாபஸ் பெற்றதை அடுத்து கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.