பொது நிகழ்வுகளில் மதுவா? இது சமுதாய சீரழிவு.. திமுக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 24, 2023, 3:47 PM IST

திருமணங்கள். விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மதுபானம் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் இந்த திருத்தங்கள் ஆரோக்கியமானவை அல்ல. ஏற்கெனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. 


திருமணம் மற்றும் விருந்து அரங்குகள் விளையாட்டு அரங்கங்களில் மதுபானம் விநியோகிக்கலாம் என்கிற ஆணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களிலும் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திருச்சி மாநாட்டில் சசிகலா, டிடிவி. தினகரன் பங்கேற்பா? ட்விஸ்ட் வைத்து பேசிய ஓபிஎஸ் தரப்பு..!

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை கூடங்களில் இதுவரை மதுபானம் விநியோகம் செய்வதற்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் 1981ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தச் சிறப்புத் திருத்தத்தின் மூலம் திருமண அரங்குகள் விருந்து அரங்குகள். விளையாட்டு அரங்கங்கள். வணிக வளாகங்கள் போன்றவற்றில் மதுபானத்தை விநியோகம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க;- மது விற்பனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட தந்தை.. அதுக்கு மேலே மகன் ஸ்டாலின்.. வச்சு செய்யும் பொன்னுசாமி..!

திருமணங்கள். விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மதுபானம் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் இந்த திருத்தங்கள் ஆரோக்கியமானவை அல்ல. ஏற்கெனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கினால் மோசமான சமுதாயச் சீரழிவையும் சாலை விபத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும்.

இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து மக்களின் வரவேற்பைப் பெற்ற தமிழக அரசு மக்கள் நலன் கருதி திருமண மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வினியோகிக்க அனுமதிக்கும் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுகொள்கிறேன் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

click me!