கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், பாஜகவை நமக்கான கட்சியாக நினைக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ ஏப்ரல் 25,26-ல் மத்திய அமைச்சர்கள் பலர் தேர்தல் பரப்புரைக்காக கர்நாடகா வர உள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். கர்நாடக பாஜக அனைவருக்குமான கட்சி. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜக ஆட்சியை பார்த்துள்ளதால், அவர் பாஜகவை பார்க்கும் விதம் வேறுவிதமாக உள்ளது. அவர்கள் பாஜகவை வித்தியாசமாக பார்க்கின்றனர். எனவே கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை ஆதரிக்க தயாரிக்க உள்ளனர்.
இதையும் படிங்க : Explained : கொச்சியில் தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை நாளை தொடக்கம்.. முழுவிவரம் இதோ..
தமிழ்நாட்டில் நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். திமுக செய்து வரும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பே எங்கள் கடமை..” என்று தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மதுபானங்களை அரசே வீடு வீடாக டோர் டெலிவரி செய்யலாம் - வானதி சீனிவாசன் காட்டம்