மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள் வைக்கப்பட்ட பேனர் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள் வைக்கப்பட்ட பேனர் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார். இதனையடுத்து, மதுரை வந்துள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி வரவேற்க, விமான நிலையத்தில் இருந்து திருமங்கலம் டோல்கேட் வரை அதிமுக நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்தனர். அப்போது, அதிமுக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரது புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
ஒற்றை தலைமை விவகாரத்தால் உச்சக்கட்ட மோதலை அடுத்த ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் வரவேற்பு பேனரில் இருவரும் புகைப்படம் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் மருது அழகுராஜ் முகதூல் பக்கத்தில்;- அந்த புகைப்படத்தை வெளியிட்டு எடப்பாடியை வரவேற்கும் பதாகையில் மதுரை விமான நிலையம் அருகில் அண்ணன் ஓ.பி.எஸ் படம் ..ஏமிரா இது.. என்று பதிவிட்டுள்ளார்.